வருகிறது 'ஒரே நாடு, ஒரே லைசன்ஸ்' - விரைவில் அமைப்படுத்த மத்திய அரசு தீவிரம்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.

Update: 2022-08-30 12:06 GMT

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.

தற்பொழுது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அளிக்கப்படும் சர்வதேச ஓட்டுனர் உரிமங்களின் வடிவம், அளவு, முறை, வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடு இருந்து வருகிறது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்த சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தி வந்த குடிமக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதனை திருத்தும் நடவடிக்கை காரணமாக ஜெனிவா ஒப்பந்தத்தின்படி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுனர் உரிமம் அளிக்கப்படுகிறது. ஓட்டுனர் உரிமத்துடன் சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை இணைப்பதற்கு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன உதவி எண்களும், மின்னஞ்சல் முகவரிகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

1949 ஜெனிவா ஒப்பந்தத்தில் இந்தியாவின் ஒரே பிரதிநிதியாக கையெழுத்திட்டுள்ளது, இந்த ஒப்பந்தத்தின்படி சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட வேண்டும் ஆனால் மாநிலங்கள் வாரியாக இதில் மாறுபாடு உள்ளதால் இதனை சீர்செய்யும் விதமாக 1989 ஆம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன சட்டத்துறை நினைவு ஒப்பந்தத்தை ஒப்பிட்டு தேவையான மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவர தயாராக உள்ளது.


Source - News 18 Tamil Nadu

Similar News