மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமையில் அடங்காது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலடி!

Update: 2022-11-29 09:02 GMT

பாஜக மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா, கட்டாய மத மாற்றத்தை தடுக்க உத்தரவிட கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஏமாற்றுதல்,அச்சுறுத்துதல் ஆகியவற்றின் வாயிலாக மத மாற்றங்கள் நடக்கின்றன. மேலும், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்தும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. இது, தேசிய அளவிலான பிரச்சினையாக உள்ளது.

பில்லி, சூனியம், மூட நம்பிக்கை ஆகியவற்றின் வாயிலாகவும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி இருந்தார். 

"கட்டாய மத மாற்றம் மிகத் தீவிரமான பிரச்சினையாகும். இது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதைத் தடுக்க, மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதமாற்றம் செய்வதை தடுக்க, மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது. என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை, தெரிவிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதச் சுதந்திரம் என்ற பெயரில் வேற்று மதத்தினரை மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமையில் அடங்காது என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

Input From: Hindu


Similar News