கொரோனாவால் மிக மோசமான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டும்.. மகாராஷ்டிராவுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு.!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பாதிப்பு, தற்போதுவரை தொடர்கிறது. கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் தொற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

Update: 2021-03-16 13:34 GMT

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பாதிப்பு, தற்போதுவரை தொடர்கிறது. கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் தொற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கட்டுங்கடங்காமல் உள்ளது. இந்தியாவில் பதிவாகும் மொத்த கொரோனா எண்ணிக்கையில் மகாராஷ்டிராவில் மட்டும் 54 சதவீதம் பதிவாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களில் முதல் 8 மாவட்டம் மகாராஷ்டிராவில் உள்ளது.

இந்தநிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மகாராஷ்டிரா அரசுக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் மகாராஷ்டிரா, தற்போது கொரோனா 2ம் அலையின் தொடக்கத்தில் உள்ளது. கொரோனா தொற்றின்போது சரியாக செயல்படாத காரணத்தால் கொரோனா அதிகரித்து வருகிறது.

எனவே 2ம் அலையை மகாராஷ்டிரா அரசு கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என கூறியுள்ளது. முன்னெச்சரிக்கை கிராமம் வரை சென்று சேர்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

Similar News