கொரோனா 3வது அலை அக்டோபரில் உச்சம் ! -எச்சரிக்கை செய்யும் தேசிய பேரிடர் மேலாண்மை!

உலகம் முழுவதும் கடந்த 20 மாதங்களாக கொரோனா பெருந்தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நமது நாட்டில் கொரோனா முதல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கி அக்டோபர் மாதம் வரை இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கியது.

Update: 2021-08-23 08:44 GMT

கொரோனா 3வது அலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடும் என்று தேசிய பேரிடர் மேலாண்ணை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 20 மாதங்களாக கொரோனா பெருந்தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நமது நாட்டில் கொரோனா முதல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கி அக்டோபர் மாதம் வரை இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கியது.

இதன் பின்னர் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விதித்து வந்தது. இதனையும் மக்கள் அலட்சியம் காட்டினர். இதன் விளைவாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2வது அலை பரவத் தொடங்கியது ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை பாதிப்பு அதிகமாக இருந்தது. தினமும் பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது. உயிரிழப்புகளும் அதிகரித்தது.

இதனிடையே கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தாலும், இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

அதிலும் கொரோனா 3வது அலை இந்த மாதம் தொடங்கி வருகின்ற அக்டோபர் மாதத்தில் உச்சத்தை எட்டும் என கூறப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக உள்துறை அமைச்சகத்தின் (எம்.எச்.ஏ.,) கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் கொரோனா 3வது அலை வருகின்ற அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்கலாம் என கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2829091

Tags:    

Similar News