செப்டம்பர் மாதம் கொரோனா 3வது அலை.. எச்சரிக்கும் கான்பூர் ஐ.ஐ.டி.!
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் ஏற்படும் என்று கான்பூர் ஐஐடி நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் ஏற்படும் என்று கான்பூர் ஐஐடி நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 2வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் தற்போதுதான் 2வது அலையில் இருந்து நாடு மெல்ல மீண்டு வருகிறது. தற்போது மேலும் 3வது கொரோனா அலை வரும் என்று சொல்லப்படுவதால் பொதுமக்கள் மிகப்பெரிய அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மீண்டும் கொரோனா வந்தால் முழுஊரடங்கு பிறப்பிக்கப்படும் நிலை உருவாகும். இதனால் அன்றாடம் தேவையை பூர்த்தி செய்வதற்கு பொருளாதார ரீதியில் பொதுமக்களுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் என புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றின் 3வது அலை பற்றி கான்பூர் ஐஐடி பேராசிரியர் ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேந்திர வெர்மா தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்தியாவில் கொரோனா தொற்றின் 3வது அலை மக்களின் நடத்தை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொறுத்து உள்ளது.
2வது அலை ஏற்பட்டபோது கிடைத்துள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையாக கொண்டு நடத்திய இந்த ஆய்வில், 3வது அலை மூன்று விதத்தில் அமையும். அதன்படி இந்தியாவில் 3வது அலை செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் உச்சமடையும். ஆனால் 2வது அலையை விட மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே கட்டுப்பாடுகளை கடுமையாக்கினால் 3வது அலையின் தாக்கத்தை குறைக்கலாம். அல்லது ஜூலைக்கு இறுதியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் தொற்று பாதிப்பை குறைக்கலாம் என கூறியுள்ளனர்.