கொரோனா பரவல் எதிரொலி: பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்.!

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

Update: 2021-04-28 02:03 GMT

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.




 


இந்த கூட்டம் இன்று காலை 10 மணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.


 



இந்த ஆலோசனையில் தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பூசி பணிகளை வேகப்படுத்துவது உள்ளிட்டவை விரிவாக விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Similar News