இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா ! முதலிடத்தில் கேரளா!
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 44,658 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 44,658 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றின் 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் கேரளா மாநிலத்தில் மட்டும் தொற்று குறைந்த பாடில்லை. நேற்று முன்தினம் ஒரே நாளில் 31,445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் 30,077 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர மகாராஷ்டிராவில் 5,108, தமிழகத்தில் 1,559, ஆந்திராவில் 1,539, கர்நாடகாவில் 1,213 பேர் என நாடு முழுவதும் புதிதாக 44,658 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy: India Today
https://www.maalaimalar.com/news/topnews/2021/08/27131021/2953015/Tamil-News-44658-corona-casea-across-india.vpf