அரபு நாடுகளில் வேலையிழந்த 10 லட்சம் பேர் கேரளா திரும்பினர்.!
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் தொழில்கள் முடங்கியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல வெளிநாடுகளில் பணியாற்றிய பிற நாட்டினர் தங்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் தொழில்கள் முடங்கியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல வெளிநாடுகளில் பணியாற்றிய பிற நாட்டினர் தங்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த மாதம் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில், கேரளாவில் இருந்து சுமார் 27 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.
இதில் 14,63,176 பேர் மீண்டும் கேரளாவுக்கு திரும்பிவிட்டனர். இவர்களில் 10 லட்சத்து 45 ஆயிரத்து 288 பேர் வெளிநாடுகளில் வேலையை இழந்து சொந்த ஊர் திரும்பியுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிலர் விசாகாலம் முடிவடைந்து ஊர் திரும்பியவர்கள் ஆவார்.