காற்றோட்ட வசதியான இடம் கொரோனா பரவலை தடுக்கும்: புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.!
கொரோனா வைரஸ் தொற்று பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது, பொதுமக்கள் பாதிப்பில் இருந்து தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது என்பது பற்றி மத்திய அரசு தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது, பொதுமக்கள் பாதிப்பில் இருந்து தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது என்பது பற்றி மத்திய அரசு தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது. இதனிடையே தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை பரவலை தடுப்பது குறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து பதிவாகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் ஒன்று ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், வீடு மற்றும் அலுவலகங்களில் நல்ல காற்றோட்ட வசதியுடன் இருந்தால், தொற்று பரவாது. எப்போதும் ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைத்திருக்க வேண்டும். எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்த வேண்டும். வீடு மற்றும் அலுவலகங்களில் வெளி காற்று வரும் வகையில் இருந்தால் கொரோனா தொற்று பரவாது.
யாராவது தொற்றுடன் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இருந்தாலோ உடனடியாக மற்றவருக்கு தொற்று பரவுவதில் இருந்து தப்பிக்க முடியும். ஏற்கெனவே முககவசம் மற்றும் கைகழுவுதல் வெளியிட்ட இருந்த நிலையில், தற்போது காற்றோட்ட வசதியுடன் உள்ள விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.