கேரளாவில் கொரோனா தொற்றால் களையிழந்த ஓணம் கொண்டாட்டம் !
கேரளாவில் கொரோனா தொற்று காரணமாக வழக்கமான உற்சாகமின்றி கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரளாவில் கொரோனா தொற்று காரணமாக வழக்கமான உற்சாகமின்றி கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரள புராணப்படி மக்களைச் சந்திக்க வரும் மாவலிச் சக்கரவர்த்தியை வரவேற்கின்ற முறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக வண்ணமயமான அத்தப்பூ கோலம், கைகொட்டிக் களி எனப்படும் பாரம்பரிய நடனம், உற்சாகமான ஊஞ்சல் விளையாட்டுகள் என ஓணம் பண்டிகை களைகட்டும்.
ஆனால் இந்த முறை கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் குறையாமல் அதிகரித்து வருகிறது. இதனால் ஓணம் கொண்டாட்டத்துக்கு கடுமையான கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளிலேயே எளிமையாக ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
Source: Puthiyathalamurai
Image Courtesy: Kerala Tourisam
https://www.puthiyathalaimurai.com/newsview/113517/Corona-pandemic-affected-the-usual-celebration-of-Onam-festival-in-Kerala