ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து 2.19 லட்சம் பேர் குணம்.. அசத்தும் இந்தியா.!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 1 கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

Update: 2021-04-26 05:15 GMT

இந்தியாவில் நேற்று மட்டும் 2.19 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 43 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.




 


இருந்த போதிலும் மகிழ்ச்சியான செய்தியாக கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 1 கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது.




 


தற்போது சிகிச்சையில் 28.13 லட்சம் பேர் உள்ளனர். 1,95,123 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தொற்றில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை 82.62 சதவீதமாக உயர்ந்து வருகிறது. 

Similar News