மத்திய பிரதேசத்தில் வசிக்கும் 5 ஆயிரம் பாகிஸ்தான் அகதிகளுக்கு கொரோனா தடுப்பூசி.!
மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில் வசிக்கின்ற 5,000 பாகிஸ்தான் அகதிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்தது.
மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில் வசிக்கின்ற 5,000 பாகிஸ்தான் அகதிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்தது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்படும் மாவட்டமாக இந்தூர் உள்ளது. அங்கு இதுவரை கொரோனா தொற்றுக்கு 1,370 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 1.52 லட்சத்திற்கும் அதிகமானோர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பெரும்பாலோனர்கள் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
இதனால் தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு விரைவாக தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது. இந்தூர் மாவட்டத்தில் இதுவரை 13.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 2.35 லட்சம் பேருக்கு இரண்டு டோஸ்கள் போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் நலமுடன் உள்ளனர். இதனால் தொற்று எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தூர் பகுதியில் வசிக்கின்ற பாகிஸ்தான் அகதிகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை மாவட்ட அதிகாரிகள் முதலமைச்சர் அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர். இதனையடுத்து உனடியாக அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு முதலமைச்சர் அலுவலகமும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை தொடர்ந்து சுமார் 5,000 பாகிஸ்தான் அகதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.