கர்நாடகாவில் 11ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி.. மாநில சுகாதார அமைச்சர் தகவல்.!

கர்நாடகாவில் 11ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி.. மாநில சுகாதார அமைச்சர் தகவல்.!

Update: 2021-01-08 18:41 GMT

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 10 லட்சத்தை கடந்துள்ளது. இதனால் அம்மாநில அரசு குறிப்பிட்ட தள்வுகளுடன் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று சற்று குறைய தொடங்கியுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், மாநிலத்திற்கு இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசிகள் வரப்போகிறது. வருகின்ற திங்கட்கிழமை 11ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார்.

கர்நாடகாவுக்கு ஒரு பெரிய நல்ல செய்தி மத்திய சுகாதார அமைச்சகத்திடமிருந்து எனக்கு தகவல் கிடைத்துள்ளது. கொரோனாவுக்கு  எதிராக 13,90,000 தடுப்பூசி டோஸ்கள் சில நாட்களில் கர்நாடகாவிற்கு வந்துவிடும்.

இதனையடுத்து வருகின்ற திங்கட்கிழமை முதல் (ஜனவரி 11) முதல் பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்படும் என கூறியுள்ளார். இது நம் அனைவருக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சியான செய்தி என்று அவர் தெரிவித்தார்.

Similar News