2 வாரங்களில் தமிழகத்திற்கு 7.33 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும்.. மத்திய அரசு அறிவிப்பு.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த ஒரு சில மாதங்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு அடுத்து வருகின்ற 2 வாரங்களில் 7.33 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த ஒரு சில மாதங்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதற்காக தமிழகத்திற்கு 1.5 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியது. இதனிடையே தடுப்பூசி பற்றாக்குறையால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் இன்னும் தமிழகத்தில் தொடங்கவில்லை. தடுப்பூசி போடும் பணியானது மேலும் கால தாமதம் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.