தனியார் மருத்துவனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவு.!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-09 04:23 GMT

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் நாடு முழுவதும் பல லட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒரே வழி அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்று மத்திய அரசு முடிவு செய்தது.


 



இதனால் நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மத்திய அரசு இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்கி வருகிறது. இதற்காக முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவிஷீல்டு ஒரு டோஸ் ரூ.780, கோவாக்சின் ஒரு டோஸ் ரூ.1,410 ஆகவும் விலை நிர்ணயம் செய்துள்ளது. அதே போன்று ஸ்புட்னிக் வி ஒரு டோஸ் ரூ.1,145ஆக விலை நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Similar News