கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை.. சுகாதார செயலர் தகவல்.!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.

Update: 2021-03-11 12:45 GMT

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்: எந்த மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. விலை தொடர்பாக மீண்டும் மருந்து நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளோம். இதனால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது.

இன்று 1 மணி நிலவரப்படி 2,56,90,545 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் மூலம் கொரோனா தடுப்பூசி போடும் பணி விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News