'கோவாக்சின்' தடுப்பூசியில் கன்றுகளின் ரத்த நிணநீர் இல்லை: மத்திய அரசு தகவல்.!

கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான ‘கோவாக்சின்’ தடுப்பூசி மருந்தில் கன்றுக் குட்டிகளின் ரத்த நிணநீர் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுரவ் பாந்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.

Update: 2021-06-17 04:22 GMT

கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான 'கோவாக்சின்' தடுப்பூசி மருந்தில் கன்றுக் குட்டிகளின் ரத்த நிணநீர் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுரவ் பாந்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.




 


இந்நிலையில், மத்திய அரசு கோவாக்சின் குறித்து விளக்கம் அளித்துள்ளது: தடுப்பூசி மருந்து உற்பத்தி நடைமுறையின்படி கன்றுகளின் ரத்த நிணநீர் பயன்பாடு உள்ளது எனவும், இறுதிகட்ட தடுப்பூசி மருந்தில் கன்றுகளின் ரத்த நிணநீர் இல்லை. மேலும், வெரோ செல்களை உற்பத்தி செய்வதில் மட்டுமே கன்றுகளின் ரத்த நிணநீரின் பயன்பாடு இருக்கிறது. வெரோ செல்கள் உற்பத்தி செய்வதில் இது ஒரு நிலையான நடைமுறையாகும்.




 


இந்த நடைமுறை உலகம் முழுவதிலும் பின்பற்றப்படுகிறது. வெரோ செல்கள் வளர்ச்சியில் நிலையான ஊக்குவிப்பான கன்றுகளின் ரத்த நிணநீர் உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது. வெரோ செல்கள் வளர்ச்சிக்குப் பிறகு அதில் உள்ள ரத்த நிணநீர் சுத்தம் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இறுதியில் தயாரிக்கும் தடுப்பூசியில் கன்றுகளின் ரத்த நிணநீர் இல்லை. இவ்வாறு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Similar News