திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் விற்பனை குறித்து அதிரடி அறிவிப்பு!

Update: 2022-02-23 05:04 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாத்திற்கான தரிசனம் செய்வதற்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைன் வாயிலாக வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ரூ.300 கட்டண தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் தினந்தோறும் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டது. நாளை முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை தினமும் கூடுதலாக 13000 டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், திருப்பதியில் அமைந்திருக்கும் பூதேவி வளாகம், சீனிவாசம் வளாகம் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் கவுண்ட்டர்களில் தினமும் 15 ஆயிரம் இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்படும். கூடுதலாக 5 ஆயிரம் டோக்கன் வழங்ப்படும் என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News