லோக் அதாலத்தில் 78,000 வழக்குகள் சமரசம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை கோடி கிடைத்தது தெரியுமா ?
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர லோக் அதாலத் நடத்தப்பட்டது 70 ஆயிரம் வழக்குகள் சமரசமாக முடிந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு 440 கோடி கிடைத்தது.
சுப்ரீம் கோர்ட்டு முதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட் வரை நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர ஆண்டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் நடத்தபடுகிறது.
அந்த வகையில் நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி,எஸ். கே குமரேஷ் பாபு , ஓய்வு பெற்ற நீதிபதி மலை சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான 4 அமர்வுகள் ஐகோர்ட் மதுரை கிளையில் ஐகோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதி ஜி. சொக்கலிங்கம்,டி. கிருஷ்ணவள்ளி ஆகியோர் தலைமையில் இரண்டு அமர்வுகள் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் என்று மாநிலம் முழுவதும் 439 அமர்வுகள் அமைக்கப்பட்டன.
இந்த நீதிபதிகள் இரு தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வழக்குகளை முடிவுக்கு கொண்டுவந்னர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் நீதிபதியே ஏ.நசீர் அகமது கூறியதாவது :-
லோக் அதாலத்தில் செக் மோசடி, மோட்டார் வாகன விபத்து , குடும்ப நலம் மற்றும் ஜீவனாம்சம் என்று ஆயிரக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இறுதியில் இரு தரப்பினரின் சம்மதத்துடன் 78,260 வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் சுமார் 440 கோடி பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்துள்ளது.