அமித்ஷா முன்னிலையில் அளிக்கப்படவிருக்கும் 30 ஆயிரம் கிலோ போதை பொருள்கள் - பின்னணி என்ன தெரியுமா?

தேசிய போதைப் பொருள் தடுப்பு மாநாட்டில் அமித்ஷா முன்னிலையில் 30,000 கிலோ போதை பொருட்களை தீயிட்டு அழிக்க பிரதமர் மோடி அரசு அதிரடியாக திட்டமிட்டுள்ளது.

Update: 2022-07-30 12:08 GMT

தேசிய போதைப் பொருள் தடுப்பு மாநாட்டில் அமித்ஷா முன்னிலையில் 30,000 கிலோ போதை பொருட்களை தீயிட்டு அழிக்க பிரதமர் மோடி அரசு அதிரடியாக திட்டமிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் போதை பொருள் தடுப்பு தொடர்பான தேசிய மாநாட்டில் மத்திய அமைச்சர் அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.


அதிகாரிகள், அமைச்சர் முன்னிலையில் 30 ஆயிரம் கிலோ எடை கொண்ட போதை பொருட்களை தீயிட்டு நாட்டின் நான்கு பகுதிகளில் ஒரே நேரத்தில் அளிக்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு குறைந்தது 75,000 கிலோ போதை பொருட்களை ஒழிப்பது என அதிகாரிகள் சபதம் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் திட்டமிட்ட இலக்கை விட அதிகமான போதை பொருட்களை அழித்து போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான யுத்தத்தில் மகத்தான வெற்றி அடையவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Source - Polimer News

Similar News