நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் விருப்பம் இந்தியாவை பற்றி என்ன தெரியுமா?

வேளான் துறையில் இந்தியா உலக தலைவராக மாற வேண்டும்.'நிதி ஆயோக்' கூட்டத்தில் பிரதமர் மோடி விருப்பம்

Update: 2022-08-08 07:30 GMT

வேளாண் துறையில் இந்தியா உலகத் தலைவராக உருவெடுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

திட்ட கமிஷனுக்கு மாற்றாக கடந்த 2014-ஆம் ஆண்டு நிதி ஆயோக் கொண்டுவரப்பட்டது. பிரதமர் மோடி அதன் தலைவராவார்.

நிதி ஆயோக்கின் உயரிய அமைப்பான நிர்வாக கவுன்சில் பிரதமர்,அனைத்து மாநிலங்களின் முதல் மந்திரிகள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள்,நிதி ஆயோக் துணைத் தலைவர்,முழுநேர உறுப்பினர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சில மத்திய மந்திரிகள் சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளனர்.

நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம் ஆண்டுதோறும் நடப்பது வழக்கம் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது.கொரோனா காரணமாக 2020-ஆம் ஆண்டு கூட்டம் நடக்கவில்லை.2021ஆம் ஆண்டு காணொலி காட்சி மூலம் கூட்டம் நடந்தது.

இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு நேரடி கூட்டமாக நிதி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் கூட்டம் நேற்று நடந்தது. ஜனாதிபதியின் கலாச்சார மையத்தில் கூட்டம் நடந்தது.

பிரதமர் மோடி தலைமை தாங்கினார். மந்திரிகள் மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக்,யோகி ஆதித்யநாத் , சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார், ஜெகன்மோகன் ரெட்டி உட்பட 23 முதல் மந்திரிகளும் மூன்று துணைநிலை கவர்னர்களும் கலந்து கொண்டனர். மத்திய மந்திரிகள் அமைச்சர் ராஜ்நாத் சிங்,நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத் துறையை நவீனப்படுத்த வேண்டும் அதன் மூலம் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறவேண்டும் வேளாண் துறையில் உலக தலைவராக உருவெடுக்க வேண்டும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்க்கைத்தரம் மேம்பட உறுதி செய்ய வேண்டும். விரைவான நகரமயமாக்கல் என்பது இந்தியாவின் பலவீனமாக அல்லாமல் பலமாக மாறும் சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும்.

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் அமைப்பானது அமைப்புக்கு அடுத்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது.

இந்த மாநாட்டிற்கு ஒவ்வொரு மாநிலமும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் பேசினார்.





 


Similar News