நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் சட்டவிரோத நிலம் வைத்திருக்கிறாரா?
நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் சட்டவிரோத நிலம் வைத்திருக்கிறாரா?
விஷ்வ-பாரதி மேற்கு வங்காள அரசுக்குத் தனது 12க்கும் மேற்பட்ட இடங்கள் தவறாகத் தனியாருக்கு ஆதரவாகப் பதிவாகியுள்ளது என்று குற்றம் சாட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதற்குப் பல்கலைக்கழகம் தயாரித்த பட்டியலில் நோபல் பரிசு பெற்றவரும் மற்றும் ஓய்வுபெற்ற பொருளாதார பேராசிரியருமான அமர்த்தியாசென் பெயரும் இடம்பெற்றுள்ளது.
தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நில பட்டியலில் பெண்கள் விடுதி, கல்வித்துறை அலுவலகம், VC யின் அதிகாரப்பூர்வ பங்களா முதலியவை ஆகும். அரசாங்க உரிமை பதிவேட்டில் உரிமையாளர்களின் பெயர்கள் தவறாகப் பதிவாகியுள்ளதால் பல்கலைக்கழகத்தின் நிலங்கள், ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் வாங்கிய நிலங்கள் தனியார் கட்சிகளுக்கு மாற்றப்பட்டு அதில் உணவகங்கள், பள்ளிகள் மற்றும் பல தொழில்கள் நடந்து வருகின்றது என்று பல்கலைக்கழகம் குற்றம்சாட்டியுள்ளார்.
பேராசிரியர் வழக்கில், 13 அங்கீகரிக்கப்படாத நிலங்கள் அவரால் அபகரிக்கப்பட்டுள்ளது மற்றும் மேலும் 125 நிலங்கள் ஏற்கனவே விஷ்வ-பாரதி மூலம் மறைந்த இவரது தந்தைக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மின்னஞ்சல் அனுப்பிய பேராசிரியர் சென், "விஷ்வ-பாரதியின் துணை வேந்தர் ஆக்கிரமிப்பு பட்டியலில் என் பெயர் குறிப்பிடப் பட்டிருப்பதை நான் கண்டேன்," என்று கூறியுள்ளார்.
எங்கள் குடியிருக்கும் இருக்கும் இந்த விஷ்வ-பாரதியின் நிலமானது நீண்ட நாட்களாகக் குத்தகைக்கு இருப்பதாகும் அது முடிவடையும் காலத்தில் உள்ளது, ஆனால் துணை வேந்தர் அவர் விரும்புவது குறித்து எப்போது வேண்டுமானாலும் கனவு மட்டும் காணலாம் என்று கூறியுள்ளார்.
விஷ்வ-பாரதியின் நிலவுரிமை அலுவலகத்தில் அறிக்கையின் படி, 1980 மற்றும் 1990யில் இவ்வாறு தவறான பதிவு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விஷ்வ பாரதியின் ஆவணங்கள் கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது, 1990 பின் பல்கலைக்கழகத்தின் நிலங்கள் ஆக்கிரமிப்பு பட்டதின் விகிதங்களை CAG வெளியிட்டது.