டெல்லியில் டெங்குவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கில் வரலை? மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல் !

டெல்லியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கில் வரவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2021-11-01 09:13 GMT

டெல்லியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கில் வரவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று குறைந்த வரும் நிலையில், பருவமழையை முன்னிட்டு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் 18ம் தேதி வரையில் மொத்தம் 723 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மாநிலத்தில் முதன் முறையாக டெங்கு பாதிப்புக்கு கடந்த மாதம் 18ம் தேதி ஒருவர் உயிரிழந்தார். இதன் காரணமாக சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டம் என அரசுக்கு கோரிக்கை வரத்தொடங்கியது.


இதனிடையே டெல்லியில் டெங்கு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் உறவினர்கள் என்று பலரின் வருகையால் வார்டுகள் நிரப்பி வழிகிறது. இதனால் நோயாளிகளுக்கு இடம் இல்லாததால் தரையில் இருந்தபடியும் மற்றும் வாசல் பகுதிகளில் சிகிச்சை பெற்று வரும் சூழல் நிலவி வருகிறது. இதுவரை டெல்லியில் 531 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது என்று அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 6 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக டெல்லி மாநகராட்சி கூறியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் டெங்கு காய்ச்சல் பற்றி மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (நவம்பர் 1) ஆய்வு கூட்டணம் ஒன்றை நடத்தினார். இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையே ஒருங்கிணைப்பு வேண்டும் எனக் கூறினார். மேலும் ஏழைகள் பலருக்கு முறையாக சிகிச்சை வழங்கப்படவில்லை. அவர்களின் மரணமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனவே பரிசோதனை அதிகரிக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News