சுதந்திர தினத்தில் தேசிய கோடி வேண்டாம், காலிஸ்தான் கோடியை ஏற்றுங்கள் - சர்ச்சையுயை கிளப்பிய பஞ்சாப் எம்.பி

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மூவர்ணக் கொடியை புறக்கணியுங்கள் என எம்.பி ஒருத்தர் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Update: 2022-08-11 10:04 GMT

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மூவர்ணக் கொடியை புறக்கணியுங்கள் என எம்.பி ஒருத்தர் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் சிரோமணி அக்காலித்தளம் தலைவரும், எம்.பி'யுமான சிம்ரஞ்சித் சிங் மான் மத்திய அரசின் ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தை புறக்கணியுங்கள் என பேசியது தற்போது சர்ச்சையாக உள்ளது.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'ஆகஸ்ட் 14, 15ம் தேதிகளில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நிசான் சாகிப் (சீக்கியர்களின் முக்கோண கொடி) ஏற்றி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காலை காலிஸ்தான் கேட்டு போராடிய ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே இந்திய படைகளான நமது எதிரிகளிடம் போரிட்டு வீர மரணம் அடைந்தார்' என தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து சிரோமணி அக்காலித்தளம் தலைவரின் கருத்துக்கு ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் மால்விந்தர் சிங் காங், அகாலித தல தலைவர்களை கடுமையாக சாடியதோடு பிரச்சாரத்தை புறக்கணித்தது அவர்களின் உண்மையான முகத்தை காட்டுகிறது ஆயிரக்கணக்கான பஞ்சாபியர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார்கள்' என்றார்.


மேலும் அவர் பேசும் பொழுது, 'தேசியக்கொடி என்பது எங்களுக்கு எப்போதும் ஆழ்ந்த மரியாதை ஒன்று எனவே மக்கள் சிம்ரஞ்சித் சிங் மான் கூறியதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார்.


இதுகுறித்து பாஜக தலைவர் வினித் ஜோஷி தெரிவிக்கையில், 'அவர் நாட்டில் அமைதியின்மை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் இருப்பிடம் அவர் கொடுத்த பெரும்பாலான அழைப்புகளுக்கு மக்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை அவரை நாடு கடத்த அரசு முயற்சிக்க வேண்டும், சிரோமணி அகாலிதளம் எம்.பி'க்கு எனது கடும் கண்டனம்' என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக எஸ்.எஃப்.ஜே எனப்படும் (சிக்கிஸ் ஃபார் ஜஸ்டிஸ்) கட்சியின் பயங்கரவாதி என கருதப்படும் குர்பந்த்வந்த் சிங் பண்ணுடன் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், 'சுதந்திர தினத்தன்று பஞ்சாப் மக்கள் மூவர்ணக் கூடிய எரித்துவிட்டு காலிஸ்தான் கோடியை ஏற்றுங்கள்' என மக்களை தூண்டியது குறிப்பிடத்தக்கது.


Source - Junior Vikatan

Similar News