தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு.!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், 5 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடித்துள்ளது.

Update: 2021-04-27 06:09 GMT

கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், 5 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடித்துள்ளது.


 



இதனிடையே தொற்று பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அப்போது பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.




 


அதன்படி வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதியும், அதன் பின்னரும், கட்சிகள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 5 மாநிலங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Similar News