'ஆ இலவசங்கள் இல்லாமல் தேர்தலா? முடியாது' - நீதிமன்ற படி ஏறிய தி.மு.க

இலவச திட்டங்களுக்கு எதிராக நடைபெறும் வழக்கில் பங்கேற்க சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க மனு அளித்துள்ளது.

Update: 2022-08-17 14:58 GMT

இலவச திட்டங்களுக்கு எதிராக நடைபெறும் வழக்கில் பங்கேற்க சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க மனு அளித்துள்ளது.

தேர்தலின் போது இலவசங்கள் வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தங்களையும் எதிர் தரப்பில் சேர்க்குமாறு தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'தேர்தல் பிரச்சாரங்களின் போது பல்வேறு கட்சிகளும் இலவசங்களை அறிவிக்கின்றன, வெற்றி பெற்ற பின் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய நிதி இல்லாமல் மாநில அரசுகள் திணறுகின்றன' என பா.ஜ.கவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் இலவச பொருள்கள் வழங்குவது பொருளாதார சீரழிவு ஏற்பாடுவதாக கருத்து தெரிவித்தது.

இந்த வழக்கில் தி.மு.க தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம், 'நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவைகள் வெவ்வேறாக உள்ளன அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான திட்டம் என்பது நிச்சயம் பொருந்தாத இதனால் மாநிலங்களுக்கு ஏற்ப மாநில அரசுகள் திட்டங்களை அறிவிக்கின்றன இதை இலவசமாக கருத முடியாது எனவே தேர்தலில் இலவசங்களை எதிர்க்கும் வழக்கில் தங்களை எதிர் தரப்பில் சேர்க்க வேண்டும்' என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Source - Dinamalar

Similar News