135.6 பில்லியன் டாலராக அதிகரித்த ஏற்றுமதி - வல்லரசு நாடுகளை பின்னுக்கு தள்ளிய இந்தியாவின் வளர்ச்சி!

Update: 2022-09-18 03:38 GMT

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு ஏப்ரல்- ஆகஸ்ட்டில் ஒட்டுமொத்த பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி 19.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெட்ரோலியம், கற்கள், நகை அல்லாத பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட, இந்தாண்டு ஏப்ரல்- ஆகஸ்ட் மாதங்களில் 8.5 சதவீதம் அதிகரித்து 135.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட, இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் பொருட்களின் ஏற்றுமதி 1.6 சதவீதம் அதிகரித்து 33.9 பில்லியன் டாலராக இருந்தது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதத்தில் புகையிலை (76.4%), எண்ணெய் உணவுப் பொருட்கள் (73.7%),மின்சாதனபொருட்கள் (50.8%) மற்றும் அரிசி (43.6.%) ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 6.75% அதிகரித்து 57.47 பில்லியன் டாலர் அளவிற்கு இருந்தது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டு மொத்த இறக்குமதி 33.15 சதவீதம் அதிகரித்து 75.84 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

Inputs From: News 18

Similar News