ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவோம் ! - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் !
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்து வரும் சம்பவத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அங்குள்ள இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வருவதுமே இப்போது முக்கியம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா செய்துள்ள முதலீடு பற்றி கேட்கிறீர்கள். முதலீடு என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். எங்களை பொருத்தவரை ஆப்கன் மக்களுடனான வரலாற்று ரீதியான உறவை அது பிரதிபலிக்கிறது.
மேலும், ஆப்கான் மக்களுடனான இந்தியாவின் உறவை வெளிப்படையாகத் தொடர்கிறது. எனவே அந்த உறவு அந்நாட்டில் நமது அணுகுமுறையை வழிநடத்தும் என்று நம்புகிறேன்.
அந்நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அந்நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அங்குள்ள இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வருவதுமே தற்போது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Dinamalar
Image Courtesy:Ndtv
https://www.dinamalar.com/news_detail.asp?id=2826451