'விவசாயிகள் பழைய விலைக்கே உரங்களை வாங்கலாம்': மத்திய அமைச்சர் தகவல்.!
உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
பயிர் சாகுபடிக்கான உரங்கள் பழைய விலைக்கே விற்கப்படும் என்று மத்திய அமைச்சர் மஞ்சுத் மான்வியா கூறியுள்ளார். பயிர் சாகுபடிக்கான உரத்தின் விலையை உற்பத்தி நிறுவனங்கள் 60 சதவீத விலையை உயர்த்தின.
இந்த விலை ஏற்றத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்நிலையில், உரம் விலை ஏற்றம் குறித்து மத்திய அமைச்சர் மன்சுத் மான்வியா வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இதன் காரணமாக உரங்களின் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனால் விவசாயிகள் உரங்களை பழைய விலைக்கே வாங்கிக்கொள்ளலாம் என அவர் கூறியிருந்தார். மத்திய அமைச்சர் வீடியோ வெளியிட்டதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் பழைய விலையில் உரங்களை வாங்கி பயன்படுத்த முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.