ஆடம்பரமாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் விவசாயிகள்.. நிஜமான விவசாயிகள் வீட்டில்.. போலிகள் டெல்லியில்.!

ஆடம்பரமாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் விவசாயிகள்.. நிஜமான விவசாயிகள் வீட்டில்.. போலிகள் டெல்லியில்.!

Update: 2020-12-14 09:29 GMT

வேளாண் சட்டத்தை நீக்க வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்து வரும் நிலையில், சிலர் கேக் வெட்டி தனது மகளின் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடியுள்ளனர்.

மத்திய அரசு வேளாண் சட்த்தை புதியதாக திருத்தம் செய்தது. இதற்கு பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பலர் இதனை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் கடந்த 20 நாட்களாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு பின்புலமாக எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன என பாஜக குற்றம்சாட்டியது. மேலும், போராட்ட களத்தில் கலவரத்தை தூண்டுவதற்காக மாவோயிஸ்ட்டுகள் நுழைந்துள்ளதாக மத்திய அரசு கடந்த சில நாட்களாக எச்சரிக்கை செய்து வருகின்றது.

இந்நிலையில், டெல்லிக்கு வந்துள்ள பணக்காரர்கள் என்ற போர்வையில் விவசாயிகளாக வந்துள்ளனர். அவர்கள் செய்யும் ஆடம்பரத்தை பார்த்து விவசாயிகள் மிரண்டு போயுள்ளனர். ஒரிஜினல் விவசாயிகள் வீட்டில் உள்ளனர்.

ஆனால் போலியாக டெல்லிக்கு வந்துள்ளவர்கள், கால்களுக்கு பல லட்சம் செய்து மசாஜ் செய்வது, பின்னர் மகளின் பிறந்த நாள் என்ற போர்வையில் மிக பிரமாண்டமாக கேக் வெட்டி சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் போலியான விவசாயிகள், இவர்கள் விவசாயிகளின் பணத்தை உறிஞ்சுகின்ற நச்சு கிருமிகள் என பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
 
 

Similar News