வீடுவீடாகச் சென்று தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணர்வு: மத்திய அரசு புதிய திட்டம் !

கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சில மாவட்டங்களில் தடுப்பூசி போடும் திட்டத்தில் பின்தங்கியுள்ளனர். அது போன்ற இடங்களில் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

Update: 2021-10-28 03:02 GMT

கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சில மாவட்டங்களில் தடுப்பூசி போடும் திட்டத்தில் பின்தங்கியுள்ளனர். அது போன்ற இடங்களில் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை கடந்து சென்று கொண்டிருந்த நிலையிலும் பல மாவட்டங்கள் இந்த பணியில் மிகவும் பின்தங்கியுள்ளது. அதன்படி பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வருகின்ற நவம்பர் 2ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு சிறப்பு பரப்புரையை நடத்துவதற்கு மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

அதாவது வருகின்ற நவம்பரம் மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திய நிலையை ஏற்படுத்த இலக்கு வைத்து மத்திய அரசு செயல்பட உள்ளது. இதனிடையே 11 கோடி பேர் தவணை காலம் கடந்தும் 2வது தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்ற அரசின் புள்ளிவிவரங்களில் தற்போது தெரியவந்துள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy:BBC

Tags:    

Similar News