முழு ஊரடங்கு இல்லை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி நிர்மலா சீதாராமன் உலக வங்கிகுழு தலைவரிடம் எடுத்துரைத்தார்.

Update: 2021-04-14 06:54 GMT

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலக வங்கி குழு தலைவர் டேவிட் மால்பாஸ், உலக வங்கிப்பணிகள் மற்றும் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி நிர்மலா சீதாராமன் உலக வங்கிகுழு தலைவரிடம் எடுத்துரைத்தார்.




 


மேலும், கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில், இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது பற்றியும் நிர்மலா சீதாராமன் உலக வங்கி குழு தலைவரிடம் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தொற்று அதிகரித்தாலும், பெரிய அளவில் கடந்த முறை ஏற்பட்டது போன்ற பாதிப்பு ஏற்படாது. எனவே பொதுமுடக்கம் அமல்படுத்தமாட்டோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Similar News