எல்லை வீரர்கள் தாய் மொழியுடன் ஹிந்தி அல்லது இங்கிலீஷ் கற்றுக் கொள்ளுங்கள்: மோடி அறிவுரை.!

எல்லை வீரர்கள் தாய் மொழியுடன் ஹிந்தி அல்லது இங்கிலீஷ் கற்றுக் கொள்ளுங்கள்: மோடி அறிவுரை.!

Update: 2020-11-16 17:03 GMT

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் எல்லையில் காவல் புரியும் நம் ராணுவ வீரர்களுடன் தான் குஜராத் முதல்வராக இருந்த காலத்தில்  இருந்தே தீபாவளி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். 

இந்த ஆண்டும் தொடர்ந்து மேற்கொண்டு, இந்திய எல்லையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லோங்கேவாலா எல்லையில் வீரர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, அவர்கள் இடையே உரையாற்றினார்.

பனி படர்ந்த மலையாக இருந்தாலும், பாலைவனமாக இருந்தாலும், தீபாவளி பண்டிகை அன்று வீரர்களுடன் இருந்தால் மட்டுமே நிறைவு பெறும் என்று அவர் கூறினார். எல்லையில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். 

தாக்குதல் நடத்துபவர்கள், ஊடுருவல்காரர்களை எதிர்த்து நிற்கும் வலிமையை நம் வீரர்கள் பெற்றுள்ளதால் நாடு பாதுகாப்பாக உள்ளது என்று பிரதமர் கூறினார். 

இன்று இந்த நாடு தனது தேசிய நலன் அனைத்திலும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் அறிந்துள்ளது என அவர் கூறினார். இந்தியாவின் இந்த நிலை, அதன் இராணுவ தீரம் மற்றும் திறனால் வந்துள்ளது. அதனால்தான் சர்வதேச அரங்கில் இந்தியா ஆற்றல் மிகு நாடாக முன்னேற முடிந்துள்ளது. 

இன்று இந்தியா, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களின் இருப்பிடத்துக்கு சென்று தாக்கும் அளவுக்கு வலுவுடன் உள்ளது.

இந்தப் கொரோனா காலத்தில் ஒவ்வொரு குடிமக்களையும் பாதுகாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்று பிரதமர் கூறினார். குடிமக்களுக்கு உணவை உறுதி செய்துள்ளதுடன், பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் மீண்டும் கொண்டு செல்ல நாடு பாடுபட்டு வருவதாகக் கூறினார்.

வீரர்கள் மூன்று விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், முதலாவதாக, வீரர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் புதுமையை ஒரு பகுதியாக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இரண்டாவதாக, யோகாவை வாழ்க்கையின் பகுதியாக கொள்ள வேண்டும், கடைசியாக, தங்கள் தாய்மொழியை விட கூடுதலாக குறைந்தது இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Similar News