இடதுசாரி தீவிரவாதம் உள்ள மாநிலங்களுக்கு மட்டுமே கடந்த 4 ஆண்டுகளில் ரூ.583.03 கோடி செலவு - அசர வைக்கும் ஹைடெக் காவல் துறை திட்டம்.!

“Modernisation of Police Forces (MPF)” for three years’ period from 2017-18 to 2019-20 with a total outlay of Rs. 25,061 crore which includes central outlay of Rs. 18,636.30 crore.

Update: 2021-08-13 02:40 GMT

 (Source: Express archive)

காவல் துறை நவீனமயமாக்கத்துக்கு கடந்த 3 ஆண்டில் ரூ.25,061 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் பொது ஒழுங்கு ஆகியவை மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். ஆனாலும், காவல்துறை நவீனமயமாக்கத்துக்கான திட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது.

2017-18ம் ஆண்டு முதல் 2019-2020ம் ஆண்டு காவல்துறை நவீனமயமாக்கத்துக்கான மொத்த செலவு ரூ.25,061 கோடி. இதில் மத்திய அரசின் செலவு ரூ.18,636.30 கோடியும் அடங்கியுள்ளது. இத்திட்டம் 2020-21ம் ஆண்டுக்கும் தொடரப்பட்டது.


orissapost

இந்த ஒருங்கிணைந்த திட்டத்தில் காவல் துறை நவீனமயமாக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செலவு என இரு பிரிவுகள் உள்ளன. குற்றம் மற்றும் குற்றவாளி கண்காணிப்பு நெட்வொர்க் (CCTNS), மின்னணு சிறைகள் திட்டம் போன்ற துணை திட்டங்களும் இதில் அடங்கும். குற்றம் மற்றும் குற்றவாளி கண்காணிப்பு நெட்வொர்க் திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.1949 கோடி.

மின்னணு சிறை திட்டத்துக்கான செலவு ரூ.100 கோடி. இடதுசாரி தீவிரவாதம் உள்ள மாநிலங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.583.03 கோடி செலவிடப்பட்டது. காவல்துறை வயர்லெஸ் மேம்பாட்டுக்கு ரூ.34.41 கோடி செலவிடப்பட்டது. தமிழக காவல்துறையின் நவீனமயமாக்கத்துக்கு ரூ.141.03 கோடி வழங்கப்பட்டது.


Tags:    

Similar News