பட்டங்களை விட திறமைகள் தான் எதிர்காலத் தேவை.. இனி உருவாக இருக்கும் புதிய வேலைவாய்ப்பு..

G20 கல்விப் பணிக்குழுவின் கீழ் எதிர்கால வேலைகள் குறித்த கண்காட்சியை அமைச்சர் தொடங்கிவைத்தார்.

Update: 2023-04-25 00:15 GMT

3-வது கல்வி பணிக்குழுவின் கீழ், மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடுட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எதிர்கால வேலை குறித்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்ட அமைச்சர், அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார். இக்கண்காட்சியில் என்ஐடி ரூர்கேலா, ஐஐடி புவனேஸ்வர், ஐஐஎம் சம்பல்பூர், மைக்ரோசாஃப்ட், மெட்டா, யுனிசெஃப், என்சிஇஆர்டி மற்றும் பல துறைகளைச் சேர்ந்த முதன்மையான நிறுவனங்களின் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதல் நாளில் 10,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டதன் மூலம் இக்கண்காட்சி நல்ல வரவேற்பைப் பெற்றது.


நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் பிரதான், 21-ம் நூற்றாண்டு அறிவு சார்ந்ததாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் இருக்கும் என்றார். 21-ம் நூற்றாண்டில் சர்வதேச தேவைகளை நிறைவேற்றுவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், பட்டங்களை விட திறமைகள் தான் எதிர்காலத் தேவை என்றும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் இளைஞர்களை வேலை தேடுபவர்களாக மாற்றாமல், வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாற்ற எண்ணியுள்ளதாக பிரதான் கூறினார்.


தொழில்நுட்பங்கள் தொடர்ந்து மாறி வருவதால், எதிர்கால வேலைகளுக்கு இளைஞர்களைத் தயார்படுத்துவதற்கான திறன் குறித்த புதிய அணுகுமுறைகளை நாம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இன்று தொழில்துறை, கல்வித்துறை, ஸ்டார்ட்அப் அமைப்புகள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஜி-20 எதிர்கால வேலைக் கட்டமைப்பின் கீழ் எதிர்காலத்திற்கு ஏற்ற சர்வதேச குடிமக்களை உருவாக்க புவனேஸ்வரில் ஒன்றிணைந்திருப்பதற்காக அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News