பாராளுமன்றத்தில் புதிய உறுப்பினர் பேச வாய்ப்பு - பிரதமர் மோடி அறிவுரை என்ன?
பாராளுமன்றத்தில் புதிய உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார்.
பாரளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறுகையில், கடந்து சில நாட்களாக நாம் அனைத்து அரசியல் கட்சிகளின் எம்.பிக்களையும் அதிகாரப்பூர்வ மற்றும் முறையில் சந்தித்த பொழுது அவர்கள் சொன்னார்கள். அவையில் கூச்சம் குழப்பம் ஏற்பட்டு ஒத்திவைக்கப்படும் போது, அது புது எம்.பிக்களை கடுமையாக பாதிக்கிறது. அவை நடவடிக்கைகள் தொடரால் போதுமான விவாதங்கள் நடைபெறாத போதும் கற்றுக் கொள்வதும் புரிந்து கொள்வதும் இயலாமல் போய்விடுகிறது.
அதனால் தான் அவை செயல்படுவது மிகவும் முக்கியமானது. எதிர்க்கட்சி எம்.பிகள் கூட தங்கள் வாதத்தை பேச விடுவதில்லை என்று புதிய எம்.பிக்கள் செல்கிறார்கள். அவர்களது வலியை புரிந்து கொள்ளுங்கள். அனைத்து கட்சி தலைவர்களும் இதைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் எனக் கூறியிருக்கிறார். எனவே இந்த அமர்வில் ஒருங்கிணைந்து செயல்படுமாறு அனைத்து கட்சி எம்பிக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.
இப்போது புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தங்களுடைய குறைகளை பாராளுமன்றத்தில் முன் வைக்கிறாரகள். மக்களுடைய குரல்களில் ஒலிக்கும் பிரதிநிதிகளாக அவர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar