கட்டாய மத மாற்ற தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் - இனி மதமாற்றம் செய்தல் 10 ஆண்டு ஜெயில்
உத்தரகாண்ட் மாநில அரசு கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதாவிற்கு உத்தரகாண்ட் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.;
உத்தரகாண்ட் மாநில அரசு கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதாவிற்கு உத்தரகாண்ட் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியாவில் கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில் உத்தரகாண்டில் முதல்வர் புஸ்க்கர் சிங் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் கட்டாய மதமாற்ற தடை மசோதா கடந்த 30-ம் தேதி சட்டசபையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பின் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, இந்த சூழலில் கட்டாய மத மாற்ற தடை மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த மசோதா சட்டமாக மாறி உள்ளது.
இந்த சட்டத்தின் படி ஒருவரை கட்டாயம் மதம் மாற்றம் செய்தால் குற்றவாளிக்கு குறைந்தபட்ச ரூ.50,000 அபராதமும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.