கொரோனா தடுப்பூசி நிறுவனத்திற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு.!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராகவும் இருப்பதால் அங்கு சென்றுள்ளார்.

Update: 2021-05-24 07:28 GMT

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராகவும் இருப்பதால் அங்கு சென்றுள்ளார்.




 


தெலங்கானா ராஜ்பவனில் காணொலி வாயிலாக நடந்த நிகழ்வில், ஸ்புட்னிக் நிறுவனம் மற்றும் 2 டி.ஜி. மருந்தை தயாரிக்கும் நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனங்களுடன் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துரையாடினார்.


 



ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி தற்போது தெலங்கானா மாநிலத்தில் 3 இடங்களில் தயாரிக்கப்படுகிறது. அதே போன்று தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையங்களை புதுச்சேரியில் ஆரம்பித்தால், வேலைவாய்ப்பும் மற்றும் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைளில் அதிகமான பயன் தரும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.

Similar News