இந்தியாவில் பசுமை விமான நிலையத்தின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு - செயலில் அசத்திக்காட்டிய பிரதமர் மோடி!
இந்தியாவில் பசுமை விமான நிலையங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்து இருக்கிறது.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் விமான பயணிகளின் எண்ணிக்கை 63.7% அதிகரித்து இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மக்களவையில் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் மக்களவையில் எழுதப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு சார்பில் கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் பசுமை விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். ஏற்கனவே 9 விமான பசுமை விமான நிலையங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 10வது பசுமை விமான நிலையம் கோவா மாநிலத்தில் டிசம்பர் 11ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 7 பசுமை விமான நிலையங்கள் குறிப்பாக சிக்கிம் மாநிலத்தில் பங்க்யக், கேரளாவில் கண்ணூர், கர்நாடகாவில் கல்போக்கி, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் விமான நிலையங்கள் ஆகியவை பசுமை விமான நிலையங்களாக இயக்கப்பட்டு வந்திருக்கிறது.
இந்தியாவில் விமான நிலைய ஆய்வகம், விமான நிலையங்களின் தரம் உயர்த்தும் பணிகள் தேவைப்படும் காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தற்போது குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் போக்குவரத்து தேவை நிலம் வணிக ரீதியிலான பயன்பாடு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். வரும் காலங்களில் பசுமை விமான நிலையங்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பதை மத்திய அரசின் இலக்கு என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: PIB