குஜராத் பா.ஜ.க வேட்பாளராக களம் இறங்கும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி!

குஜராத் பா.ஜ.க வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு சீட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2022-11-11 04:09 GMT

குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் ஐந்தாம் தேதிகளில் இன இரண்டு கட்டங்களாக அங்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியல்களை அந்த கட்சியின் நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா அவரின் பெயர்களும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹர்திக் பட்டேல் அவருடைய பெயரும் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது.


பா.ஜ.க வேட்பாளராக கிரிக்கெட் வீரரின் மனைவியின் பெயர் பட்டியலில் இடம் பெற்று இருப்பது அங்கு இருக்கும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பிரபலங்கள் அனைவரும் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருப்பது கட்சிக்கு மேலும் வலு சேர்த்து விதமாக அமைந்து வருகிறது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு வருகின்ற டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இரண்டு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.


தேர்தல் களமும் தற்பொழுது சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க இடத்தை கைப்பற்றும் என்று பலரின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பா.ஜ.க சார்பில் தற்பொழுது முதல் கட்டமாக 13 வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. இதில் கிரிக்கெட் வீரர் ஜடேஜா அவர்களின் மனைவியின் பெயரும் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் முதல்வர் பூபேந்திரப் பட்டேல் அவர்களின் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டது.

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News