குஜராத் இடைத்தேர்தல்: 8/8 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை - காவிக்கோட்டை என மீண்டும் நிரூபணம்!

குஜராத் இடைத்தேர்தல்: 8/8 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை - காவிக்கோட்டை என மீண்டும் நிரூபணம்!

Update: 2020-11-10 13:03 GMT

குஜராத் மாநிலத்தில் 8 எம்.எல்.ஏ இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று மற்ற மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்ந்து நடைபெற்று வருகிறது.

அங்கு 8 எம்.எல்.ஏ தொகுதிகளிலும் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது.

இந்த 8 இடங்களையும் பா.ஜ.க கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 180 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் 110 இடங்களுடன் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது.

8 இடங்களையும் பா.ஜ.க கைப்பற்றும் பட்சத்தில் பா.ஜ.க சட்டசபை எண்ணிக்கை 118 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், கடந்த 22 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் குஜராத் காவிக்கோட்டை என மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

Similar News