நீதிமன்ற வளாகத்தில் 4 பேர் சுட்டுக்கொலை! டெல்லியில் பரபரப்பு!

டெல்லி ரோகினி பகுதியில் செயல்பட்டு வரும் நீதிமன்றத்தில் இன்று வழக்கம் போன்று நீதிமன்ற வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தது. வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் என்று பலர் வழக்கு விசாரணைக்காக வந்திருந்தனர்.;

Update: 2021-09-24 12:14 GMT
நீதிமன்ற வளாகத்தில் 4 பேர் சுட்டுக்கொலை! டெல்லியில் பரபரப்பு!

டெல்லி ரோகினி பகுதியில் செயல்பட்டு வரும் நீதிமன்றத்தில் இன்று வழக்கம் போன்று நீதிமன்ற வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தது. வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் என்று பலர் வழக்கு விசாரணைக்காக வந்திருந்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் இன்று மதியம்  திடீரென்று புகுந்த ஒரு கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தது. இதில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாதா ஜிதேந்தர் கோகி மற்றும் 3 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தாதா ஜிதேந்தர் கோகியை எதிரிகள் சுட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:Zee News


Tags:    

Similar News