BREAKING : "மக்களை தவறாக வழிநடத்தும் செயலை காங்கிரஸ் கட்சி நிறுத்த வேண்டும்" - ஹரியானா முதல்வர் !

Breaking News.;

facebooktwitter-grey
Update: 2021-09-12 03:55 GMT
BREAKING : "மக்களை தவறாக வழிநடத்தும் செயலை காங்கிரஸ் கட்சி நிறுத்த வேண்டும்" -  ஹரியானா முதல்வர் !

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் பற்றி அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் கூறும்போது, ஒரு குறிப்பிட்ட பிரிவினரே விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களில் பலர் விவசாயிகளே இல்லை. மக்களை தவறாக வழிநடத்தும் செயலை காங்கிரஸ் கட்சி நிறுத்த வேண்டும். விவசாயிகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரியானா அரசுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுபவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி ஒவ்வொருவருக்கும் தெரியும் என கூறியுள்ளார்.  

இது சமூகம் மற்றும் அரியானாவை பாதிக்கிறது. சட்டம் மற்றும் ஒழுங்குக்கு இடையூறு ஏற்பட்டால், அதனை பாதுகாக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை என்று அவர் கூறியுள்ளார்.

Image : Indian Express

Maalaimalar

Tags:    

Similar News