'இந்துப் பெண்கள்- முஸ்லீம் ஆண்கள்' ஆபாச, கற்பழிப்புக் கதைகள் - சர்ச்சையில் அமேசான்!

'இந்துப் பெண்கள்- முஸ்லீம் ஆண்கள்' ஆபாச, கற்பழிப்புக் கதைகள் - சர்ச்சையில் அமேசான்!

Update: 2020-12-31 09:59 GMT

ஒவ்வொரு நாளும் நாட்டின் ஏதாவது ஒரு பாகத்தில் முஸ்லிம் ஆண்கள், ஹிந்துப் பெண்கள் மேலே நடத்தும் கொடூரமான குற்றங்களை குறித்து பல செய்திகளை நாம் படித்து வருகிறோம். அந்த செய்திகள்,  தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், தினசரி படிப்பதாலும் அதைக் குறித்த கோபம், வருத்தம், மன உளைச்சல் என எதையும் பலர் மனதிலும் அது ஏற்படுத்துவதில்லை. இவை சாதாரண, அன்றாட நிகழ்வாகி விட்டது.

 இப்படி ஒரு குறிப்பிட்ட சமூகம் ஹிந்து பெண்களின் மேல் குறிவைத்து தாக்குதல் நடத்தும் குற்றங்களைத் தடுக்கத் தான் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், இமாச்சலப்பிரதேசம் ஆகிய அரசாங்கங்கள் புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறது.

அமேசானின் டிஜிட்டல் புத்தக தளமான கிண்டில் ஸ்டோர், ஹிந்துப்பெண்கள் மற்றும் முஸ்லிம் ஆண்களுக்கு இடையே ஆபாச மற்றும் கற்பழிப்பு கதைகளைக் கொண்ட பல புத்தகங்களை வெளியிட்டு வருகிறது.

 ஸ்வராஜ்யா பத்திரிக்கையாளர் சுவாதி கோயல் சர்மா கூறுகையில், அமேசானின் கிண்டில் ஸ்டோரில் இத்தகைய ஆபாச மற்றும் கற்பழிப்பு கதைகள் குறைந்தது 90 இருப்பதாக தெரிவித்தார். 

இக்கதைகளில் பல, முஸ்லிம் ஆண்கள் திருமணமான ஹிந்து பெண்களுடன் (பெரும்பாலும் கட்டாயப்படுத்தப்பட்ட) பாலியல் உறவு வைத்துக் கொள்வது போன்ற கதைகள் அதிக அளவில் உலா வருகின்றன.

 இந்த புத்தகங்கள் அனைத்தும் வருடாந்திர சந்தாவிற்கு கிடைக்கிறது. அதில் நேரடியாக யார் வேண்டுமானாலும் புத்தகங்களை பதிப்பித்துக் கொள்ளலாம் என்ற கொள்கையை கிண்டில் வைத்திருப்பதால் இத்தகைய ஆபாச கதைகளை விற்பது பலருக்கும் எளிதாகி வருகிறது.

 இந்த புத்தக அட்டைகள் பெரும்பாலும் தலையில் குல்லா அணிந்தும், தாடி வைத்திருக்கும் முஸ்லீம் ஆண்களையும், அரைகுறை ஆடையுடன், பொட்டுக்கள் வைத்திருக்கும் இந்துப்பெண்களையும் காட்டுகிறது. 

Example of Such Books from Kindle Store

 இந்தப் புத்தகங்களில் வரும் இந்து பெண்கள் 'பழமைவாதிகள்',  'ஐயர்' 'மிகவும் கடவுள் பக்தி உள்ளவர்கள்',  'உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்', 'மிகவும் கடவுள் பக்தியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த வந்தவர்கள்' என்று சித்தரிக்கப்படுகிறார்கள்.

 'சென்னை விபச்சாரி',  என்றும் இன்னும் பல தரப்பட்ட ஆபாசமான வார்த்தைகளில் வர்ணிக்கப்படுகிறார்கள். இதில் ஒரு புத்தகம் ஒரு முஸ்லிம் தாதா ஒரு திருமணமான இந்து பெண்ணை கற்பழிப்பது போல உள்ளது. இன்னும் பல புத்தகங்களிலும் இதே போன்ற கதைகள் தொடர்கின்றன.

 இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்த அனைத்து ஆபாச புத்தகங்களிலும் ஆண்கள் முஸ்லிம்கள் மட்டும் அல்ல ஆனால் ஒரு கிரிமினல் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். பெண்கள் இந்துக்கள் மட்டுமல்ல ஆனால் திருமணம் ஆனவர்களும் கூட. இந்தப் புத்தகம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஆண் வர்க்கத்தினரை ஈர்க்கும் நோக்கில் அமைந்துள்ளது போல் தெரிகிறது.

 இப்படிப்பட்ட ஆண்கள் இந்து பெண்களின் முன்னால் எப்படி நடந்து கொள்வார்கள் என்றும் இத்தகைய கதைகளை நிஜவாழ்க்கையில் நடத்த முயற்சிப்பார்களா என்பதும் பெரிய கேள்விக்குறி.

 உண்மையில் சொல்லப்போனால் இந்த கதைகளில் உள்ளது போலவே நிஜ வாழ்க்கையிலும் பல கொடூர குற்றங்கள் நடந்துள்ளன. இச்சம்பவங்களை சர்மாவே முன்னெடுத்து காட்டியிருக்கிறார்.

 பல சம்பவங்களில் முஸ்லிம் ஆண்களின் காதலையும், காமத்தையும் மறுத்ததற்காக இந்து பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 இதற்கெல்லாம் பதில் அளித்த தேசிய பெண்கள் ஆணையம் (NCW), அமேசான் இந்தியாவிற்கு புகார் எழுதியுள்ளது. அதில் இத்தகைய புத்தகங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஊக்குவிப்பதாகவும், சமுதாயத்திற்கு தவறான கருத்துக்களை தெரிவிப்பதாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. 

NCW notice to Amazon Kindle

 மேலும் இத்தகைய ஆபாச மற்றும் கற்பழிப்பு கதைகளை இ- வலைதளங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் அது சட்டத்தை மீறிய செயலாகும் என்றும் தெரிவித்துள்ளது.

 ஷர்மாவும் அவருடைய வழக்கறிஞர்களும் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதங்கள் எழுதி இத்தகைய பதிப்பிற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய முயற்சித்துள்ளனர். அமேசான் கிண்டில் இதற்கு பதிலளித்து தாங்கள் இந்த விஷயத்தை விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Similar News