இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை எப்படி கொண்டாடலாம்: வாழ்த்துக்களுடன் பிரதமர் கூறிய அறிவுரைகள்.!

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை எப்படி கொண்டாடலாம்: வாழ்த்துக்களுடன் பிரதமர் கூறிய அறிவுரைகள்.!

Update: 2020-11-12 10:46 GMT
பொதுவாக ஒவ்வொரு பண்டிகைக்கும் தனித்தனியாக தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறுவது வழக்கம், ஆனால் இந்த ஆண்டு நமது பிரதமர் திரு.நரேந்தி மோடி அவர்கள் நவராத்திரி, தசரா, ஈத் பண்டிகை, தீபாவளி, சாத் பூஜை, குருநானக் திருவிழா போன்ற அனைத்து பண்டிகைகளுக்கும் நாட்டு மக்களுக்கு ஒரு மாதம் முன்பே வாழ்த்துக்களை கூறினார்.

ஒட்டு மொத்தமாக வாழ்த்துக்களைக் கூறியதுடன், கொரோனா அவஸ்தை இன்னும் நாட்டை விட்டு முழுமையாக அகலாத நிலையில் குடிமக்கள் விழாக் காலங்களில் எந்த அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்பதற்கான அறிவுரைகளையும் வழங்கினார். மேலும் நம் உள்நாட்டுப் பொருள்கள் விற்பனையை அதிகரிக்கும் விதத்தில் பொது மக்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

அப்போது பண்டிகை காலம் என்பதால் நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை  தவிர்க்க வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் " சில நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தது. உடனே மக்கள் மறுபடியும் பழைய மாதிரி வெளியில் கூட்டம் கூட்டமாக உலவ ஆரம்பித்துவிட்டனர். அதனால் மீண்டும் அதிகப்படியான தொற்று ஏற்பட்டு கொண்டு அவதிப்படுகிறார்கள், இந்த நிலையில், வெற்றி கிடைக்கும் வரை நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது. தடுப்பு மருந்து இல்லாவிட்டாலும், அது வரும் வரை நாம் முன்னெச்சரிக்கையாக இருப்போம் என்று கூறினார்.  

மேலும் நமது வாழ்க்கை குறித்த பொறுப்புணர்வும், கொரோனா குறித்த விழிப்புணர்வு ஒரே நேர்கோட்டில் செல்லும் போது, அப்போதுதான் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும் என்று கூறிய பிரதமர் நவராத்திரி, தசரா, ஈத், தீபாவளி, சாத் பூஜை, குருநானக் திருவிழா போன்ற அனைத்து பண்டிகைகளுக்கும் முன்கூட்டியே நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நாட்டு மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி அவர்கள்,  தீபாவளியை முன்னிட்டு கடைவீதிகளுக்குச் செல்லும் மக்கள், உள்ளூரில் தயாரித்த பொருள்களை வாங்கி, உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளியுங்கள் என்றார்.

மேலும் எப்போது ஒவ்வொரு குடிமக்களும் பெருமையோடு உள்ளூர் தயாரிப்புப் பொருள்களை வாங்குகிறோமோ, உள்ளூர் தயாரிப்புகளைப் பற்றி பேசுகிறோமோ அப்போது, நாம் நமது உள்ளூர் தயாரிப்புப் பொருள்களின் தகவல்களை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கிறோம். இதன் மூலம் நம் நாட்டு பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவிட முடியும் என்றார். பிரதமரின் இந்த வாழ்த்துக்களுடன் கூடிய அறிவுரை கோடிக்கணக்கான நம் நாட்டு மக்களை வெகுவாக ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Similar News