வீட்டிலிருந்து உணவு வேண்டும் ஐயா - நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் வேண்டுகோள்

சஞ்சய் ராவத்துக்கு வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-08 13:22 GMT

சஞ்சய் ராவத்துக்கு வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவசேன மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் 1034 கோடி மதிப்புள்ளான மோசடிகள் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணை முடிவில் அவர் ஜூலை 31ஆம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்டார், மறுநாள் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் பின்னர் அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரித்தது.


இந்த நிலையில் சஞ்சய் ராவத் என்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார், அப்போது அவர் இரண்டு வாரங்களுக்கு அதாவது வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் நடக்கும் நீதிபதி எம்.ஜி.ரேஸ் பாண்டே உத்தரவிட்டார்.


மேலும் அவர் வீட்டில் இருந்து உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு வேண்டிக் கொண்டார் அவரது வேண்டுகோளை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.


Soure - News 7 Tamil

Similar News