ராணுவத்தில் சேர ஆசைப்பட்டேன் முடியவில்லை - ராஜ்நாத் சிங் உருக்கம்

குடும்ப சூழ்நிலையால் ராணுவத்தில் சேர முடியவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இளமை காலத்தைப் பற்றி கூறியுள்ளார்.

Update: 2022-08-20 02:10 GMT

குடும்ப சூழ்நிலையால் ராணுவத்தில் சேர முடியவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இளமை காலத்தைப் பற்றி கூறியுள்ளார்.

இளம் வயதில் தான் ராணுவத்தில் சேர விரும்பி அதற்கான தேர்வு எழுதினேன் ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட சூழல் காரணமாக சேர முடியவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

மணிப்பூரில் உள்ள இம்பாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 'இந்தியா சீனா இடையே மோதல் நடந்த போது நமது ராணுவ வீரர்கள் காட்டிய துணிச்சலும், தைரியமும் அன்றைய ராணுவ தளபதிக்கும், தனக்கும் தெரியும்' என்றார்.

மேலும் மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்றோர் ஏதோ ஒரு வகையில் தேசத்திற்கு பங்காற்றினாலும் ராணுவ வீரர்களின் பணி சேவையை விட மேலானது எனக்கு கூறினார்.

Similar News