ஆப்கானில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டை கைப்பற்றினர். இதனால் அந்நாட்டில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் அனைவரும் அண்டை நாடுகளுக்கு உயிர் பிழைத்தால் போதும் என்று காபூல் விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.

இதனால் அமெரிக்க, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் விமானப்படைகளை அனுப்பி தங்களின் நாட்டு குடிமக்களை பாதுகாப்பாக மீட்டு வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 14ம் தேதி முதல் தற்போதுவரை 13 ஆயிரம் பேரை அமெரிக்க படைகள் மீட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பு அரிந்தம் பக்சி இன்று பேசும்போது, ஆப்கானில் இருந்து இந்திய விமான படையை சேர்ந்த சி17 ரக விமானம் 107 இந்தியர்கள் உள்ளிட்ட 168 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது எனக் கூறினார்.
அந்த விமானம் இன்று காலை காசியாபாத் நகரில் உள்ள ஹிண்டன் இந்திய விமான படை தளத்தில் தரையிறங்கியது. அதில் 107 இந்தியர்கள் உள்ளிட்ட 168 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அதிகாரி கூறினார்.
Source: DailyThanthi
Image Courtesy: ANI
https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/22105216/Indian-flight-returning-from-Kabul-Corona-test-for.vpf