மூத்த தலைவர் மரணம், அயல்நாட்டு பயணம் என நான் பேசினால் பூகம்பம்தான் - உத்தவ் தாக்ரே குடும்பத்தை எச்சரித்த ஏக்நாத் ஷிண்டே

'நான் பேச நினைத்தால் பூகம்பம் வெடிக்கும்' என ஏக்நாத் ஷிண்டே எச்சரித்துள்ளார்.

Update: 2022-07-31 09:17 GMT

'நான் பேச நினைத்தால் பூகம்பம் வெடிக்கும்' என ஏக்நாத் ஷிண்டே எச்சரித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்ரே அணியை விமர்சித்துள்ளார். கடந்த சில நாட்களாக இரண்டு அணி இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நாசிக் மாவட்டம் மலோக்கானில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது. 'விபத்தில் மரணம் அடைந்த சிவசேனா மூத்த தலைவர் தர்மவீர் ஆனந்த் விகே என்ன நடந்தது என எனக்கு தெரியும் இதில் நான் சாட்சி! நான் பேட்டி கொடுக்க ஆரம்பித்தால் பூகம்பம் வெடிக்கும். சிலரைப் போல் நான் ஆண்டுதோறும் விடுமுறைக்கு வெளிநாடு செல்வதில்லை, சிவசேனா அதன் வளர்ச்சி மட்டுமே என் மனதில் உள்ளது' என்றார்.

பால் தாக்கரே மருமகள் ஸ்மிதா தாக்குரே பேரன் நிக்கார் தாக்கரே ஆகியோர் எனக்கு ஆதரவளித்துள்ளனர், எங்களை துரோகிகள் என்னை கூறுகிறார்கள் முதல் மந்திரி பதவிக்காக பால் தாக்கரே கொள்கையை சமரசம் செய்த உங்களை நாங்கள் எப்படி அழைப்பது? நீங்கள் தேர்தலில் பா.ஜ.க'வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டீர்கள் ஆனால் முதல் வேலையாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்தீர்கள் இது துரோகம் இல்லையா?


அடுத்த சட்டசபை தேர்தலில் எனது தலைமையிலான சிவசேனா பா.ஜ.க கூட்டணி 288 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்தார்.


Source - Maalai Malar

Similar News