'சர்தார் பட்டேல் பிரதமராக இருந்திருந்தால் நாடு வேறு ஒரு திசையில் பயணித்திருக்கும்' - குஜராத் மக்களிடம் பிரதமர் மோடி பேசியது என்ன?

'சுதந்திரத்திற்கு பின் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்' என பிரதமர் மோடி குஜராத் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2022-12-02 02:17 GMT

'சுதந்திரத்திற்கு பின் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்' என பிரதமர் மோடி குஜராத் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஜராத் மக்கள் சுதந்திரத்திற்கு பின்னால் செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க பா.ஜ.க'வினை மாநிலத்தில் மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது வலிமையான இந்தியாவை உருவாக்க குஜராத்தில் பா.ஜ.க'வே ஆட்சியில் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

குஜராத்தின் சப்பர்கந்தா மாவட்டத்தில் தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியதாவது, 'இந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சியில் இருக்கப் போகிறார்கள் என்பதற்கான தேர்தல் மட்டும் கிடையாது இந்தியா 75வது சுதந்திர தினத்தை நிறைவு செய்துள்ளது. நூறாவது சுதந்திர தினத்தை அடுத்த 25 ஆண்டுகளில் கொண்டாட உள்ளோம், இந்த தேர்தலில் ஆட்சி அமைப்பது என்பது அடுத்த 25 ஆண்டுகளுக்கான கட்டமைப்பை உருவாக்கும் தேர்தல்' என்றார்.

மேலும் பேசிய அவர், 'சர்தார் பட்டேல் பிரதமராக இருந்திருந்தால் நாடு வேறு ஒரு திசையில் பயணித்திருக்கும் என அனைவரும் கூறுகின்றனர். நாங்கள் முன்பே இறந்தவர்கள் செய்த தவறை திருத்த முயற்சியில் இறங்கி வேலைகளை தொடங்கிவிட்டோம். அதற்கான கடின முயற்சியில் இறங்கி உள்ளோம்' எனவும் பேசினார்.


Source - Dinamani

Similar News